December 7, 2021

சுதந்திரம் இழக்கிறதா கோடம்பாக்கம்? : மாநாட்டுக்கு ரெட் மூ!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.

 

படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், ஸ்னீக் பீக்கும் ரசிகர்களிடையே வைரலானது. இதற்கிடையே மாநாடு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்

 

இப்படிப்பட்ட சூழலில்,திடீர் என அதாவது அண்ணாத்தை ரிலிஸ்க்கு பிறகு  திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மாநாடு திரைப்பட வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிம்புவுக்கு திரையுலகில் பல சிக்கல்கள் இருந்தது ஆனால் அவை அனைத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிக்கப்பட்டு சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு விளக்கப்பட்டது .

ஆனால் மாநாடு படத்துக்கு வேறு ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது போல் மாநாடு படத்தையும் வெளியிட அந்நிறுவனம் விரும்பியதாகவும், அதற்கு படக்குழு ஒத்துவரவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனவேதான் படத்துக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வேண்டுமென்ற சட்டம் அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி அண்ணாத்தே படம் வெளியானபோது கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழை தமிழ்நாடு அரசு ஏன் கேட்கவில்லை எனவும் அவர்கள் கேள்வியை முன்வைக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *