December 7, 2021

அமெரிக்க பயிற்சியால் பயன் இல்லை  : அமெரிக்க அதிபர் அதிர்ச்சி !

எதிர்ப்பே இல்லாமல் சரணடைய காரணம் என்ன ?

ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதால் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது. தலிபான்களை ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது. ஆப்கன் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்கன் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என அமெரிக்க அதிபர் நேற்று ஆப்கான் நிலவரம் குறித்து மக்களுக்கு உரையாற்றினார் .

பயங்கரவாத்தை ஒழிக்க அமெரிக்கா ஆப்கான் சென்றது அது நிறைவேறி விட்டது என அமெரிக்க அதிபர் சொல்லி இருப்பது நிலைமைக்கு முற்றிலும் முரணான பேச்சு என அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . முன்பை விட தலிபான்ங்கள் அதிகாரத்துக்கு வந்து இறுகின்றனர் என்பதுதான் நிலை என்றும்  ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா என்ன பயிற்ச்சி அளித்தனர் அடிமை பயிர்ச்சியா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

ஏனென்றால் சிறு எதிர்ப்பே இல்லாமல் சரணடைய அடிமை பயிற்சியால்தான் முடியும் எனவும் கேலியாக சொல்லிவருகின்றனர் அமெரிக்க மக்கள் .

இருப்பினும் அமெரிக்க படைகளின் இருப்பை ஆப்கானிஸ்தான் மக்களும் ,படைகளும் விரும்பவில்லை என்றும் அதே நேரம் தாலிபான்க்களின் ஆளுமையையும் மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிகிறது . அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இல்லாத சுய சார்பு ஜனநாயக ஆட்சி அமையவே மக்கள் விரும்புகின்றனர் . அவ்வாறான அரசு அமைய வாய்ப்பு மிக மிக குறைவு என்பதே யதார்த்தம் .

ஆப்கானின் அசைவுகள் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்க படுகிறது . சீனா .பாகிஸ்தான் பேன்ற நாடுகள் ஆளுமைக்காக  அதனை அணுகுகின்றன .இந்தியா போன்ற நாடுகள் உலகின் அமைதிக்காக ஆப்கானிஸ்தானை அணுகுகின்றன .

ஒருவேளை ஆப்கானிஸ்தானை ஆப்கானிஸ்தானை ஆளுமை செய்ய முனையும் நாடுகள் எல்லாம் தோல்வியையே பெறுகின்றன .இதனாலேயே ஆப்கானிஸ்தான் பேரரசுகளின் கல்லறை என அழைக்கபடுகிறது.

அமைதிக்கும் அன்புக்கும் அணுகினால் ஒருவேளை ஆப்கான் தீவிரவாதிகள் மாறலாம் .அதற்கான அணுகும் தகுதி இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது .

எது இனி நடக்கும் என்பது இனிதான் தெரியவரும் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *