December 7, 2021

ஆப்கானிஸ்தானில் நடைபெறுவது என்ன ? : மீண்டும் உலக அமைதிக்கு அச்சமா !

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தாலிபன்களின் அரசு புகலிடம் தருவதாகக் கூறி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதன் பின்னரே ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன

.

வெளிநாட்டுப் படைகளின் இருப்பால் தாலிபன்கள் கை ஓங்காமல் இருந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.

எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும் இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கணக்குப்படி செப்டம்பர் 11ம் தேதி 2021ல்தான் அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும். இரட்டை கோபுர தாக்குதல் நடந்து சரியாக 20 வருடம் முடியும் போது படைகள் வாபஸ் வாங்கப்படுவதாகவே முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களால் அமெரிக்க அதிபர் பிடன் ஆப்கானிஸ்தானை விட்டு இந்த மாதம் இறுதியிலேயே வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார்.

ஏற்கனவே 90 சதவிகித படைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. அங்கு அமெரிக்க படைகள் பெயருக்கு மட்டுமே சில இடங்களில் உள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வெளியேற அந்த பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டன. முக்கியமாக 9 மாகாண தலைநகரங்கள், எல்லை பகுதிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள், 290க்கும் அதிகமான மாவட்டங்களில் தற்போது தாலிபான்களின் வெள்ளை கொடிதான் பறந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்க படைகள் பயிற்சி கொடுத்தது என்றாலும் கூட ஆப்கான் படைகள் அவ்வளவு திறமை கொண்டது கிடையாது. ஆப்கான் படைகளும் எண்ணிக்கையில் தாலிபான்களை விட கொஞ்சம் கம்மிதான். அதோடு தாலிபான்கள் கொரில்லா ஸ்டைல் அட்டாக் பாணி கொண்டது என்பதாலும் உடனுக்குடன் ஆப்கான் படைகள் ஒவ்வொரு நகரத்திலும் வரிசையாக வீழ்ந்து வருகிறது. பல நகரங்களில் சண்டையே நடக்காமல் தாலிபான் படைகளிடம் ஆப்கான் படைகள் சரண்டர் ஆகிவிடுகிறது.

போர் தளபதியை மாற்றிய ஆப்கான் தலைமை .

இதனால் தற்போது ஆப்கான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் வாலி அஹமத்சாய் கூட மாற்றப்பட்டு இருக்கிறார். தாலிபான்களுக்கு எதிராக இவரின் வியூகங்கள் சரியாக இல்லை என்று புகார் எழுந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கானி இவரை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். இவருக்கு பதிலாக ஹிபாத்துல்லா அலிசாய் தற்போது தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கான் படைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ,காபுலுக்கு மிக அருகே இருக்கும் நகரங்களையும் கூட தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கிவிட்டது. காபுலில் இருந்து வெறும் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காசானி நகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அடுத்த வார இறுதியில் காபுலில் மிகப்பெரிய மோதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உளவுப்படை அறிக்கையின்படி தாலிபான்கள் மொத்த நாட்டையும் 90 நாட்களுக்குள் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வேகத்தை பார்த்தால் அதற்கு முன்பாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆப்கான் அரசு அதிகார பகிர்வுக்கு சம்மதம் .

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்கள் காலையில் இருந்து பிரேக்கிங் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தாலிபான் படைகளுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தை பிரித்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் மோதல் வேண்டாம்.

ஆனால் இதை தாலிபான்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. தாலிபான்கள் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியை கொஞ்சம் கூட விரும்பவில்லை.
அவர் ஆட்சியில் இருக்கும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு, காபுலை கைப்பற்றிய பின் யாராவது மிச்சம் இருந்தால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தில்தான் தாலிபான்கள் உள்ளனர்.

வெற்றியின் தொடர்சியில் முன்னேறும் தாலிபான்கள் ஒரு கடும் இறுதிபோரை நடத்தும் நிலைக்கு வரும்போது அங்கு என்ன நிகழும் என்பதை சொல்வதற்கில்லை என்கின்றனர் சர்வதேச நாட்டினர் .அப்பாவி மக்கள் ஆப்கான் அரசு அதரவாளர்கள் எனபடுவோர் ஈவு இரக்கம் இல்லாமல் அழிக்கப்பட வாய்ப்பு உண்டு ஏனென்றால் தாலிபான்ங்கள் அதிகார முறையே அவ்வாரனதுதான் என்கின்றனர் .

தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மிகவும் அடக்குமுறையில் நடத்த படுவார்கள் .உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அடிகாவ்லபடலாம் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது .

கொரோனே ஏற்ப்படுத்திய பொருளாதார மாற்றம் அதன் விளைவாக தீவிரவாத ஆச்சுருத்தலையும் ஆட்சிக்கு கொடுவருகிறது என்பதுதான் உண்மை நிலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *