December 7, 2021

ஒரு வெற்றியின் வலி: மகிழ்ச்சிக்கு முன்னாள் !

ஈட்டியை விட கூர்மையான நீரஜ்சோப்ராவின் வார்த்தைகள் !

 

அடிப்படை வசதிகள் இல்லாமல் என்னுடைய கிராமத்தை விட்டு நான் வெளியேறியது போல, வேறு யாரும் வெளியேறக் கூடாது என்னுடைய கிராமத்தில் விளையாட்டு மைதானம் கூட இல்லை!

– ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் இப்படி சொல்லி இருப்பது இந்திய விளையாட்டுத்துறையின் கல நிலவரத்தை வெளுச்சம் போட்டு காட்டி இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன .

ஒரு தங்கம் வாங்கியதற்கு ஏன் இவ்வளவு பூரிப்பாகிறார்கள்  இந்திய மக்கள் என்பதற்கு பின்னால் உள்ள தடைகள்தான் காரணம் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள் .

வீரர்கள் திறனுக்கான அனைத்து மட்டங்களிலும் பல்வேறு தடைகளை கடந்துதான் வரவேண்டியுள்ளது . குறிப்பாக கிரிக்கெட்டை தவிர மற்ற தனிநபர் விளையாட்டுகளுக்கு வீரர்களுக்கு ஸ்பான்சர் கூட கிடைப்பதில்லை என்பது வேதனையான ஓன்று .

அரசியல் , பொருளாதாரம் , தரமான விளையாட்டு கலங்கள் ,உபகரன்கள் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம் .இந்த உண்மை நிலையில் தங்கமும் ,வெள்ளியும் ,வெங்கலமும் எப்படி வெல்லமுடியும் என்கின்றனர் விளையாட்டு திறனாளர்கள் .

இவ்வளவு தடைகளை தாண்டிதான் தங்கம் வென்று இருக்கிறார் நீரஜ் சோப்ரா என்பதுதான் அவரது கருத்தில் வெளிப்பட்டு இருக்கிறது .

 

வென்ற பிறகு பணமும் ,பட்டமும் பதக்கமும் அள்ளிகொடுக்கும் அரசுகள் வீரர்கள் தயார் செய்வதில் வசதிகளை பெருக்கினால் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுசை  ஹரியானா அரசுஅறிவித்து இருக்கிறது .

பதக்கங்களை வென்று வரும் ஹரியானா வீரர்கள்

3rd May 2019, முழங்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நீரஜ் , 7th August 2021, தங்கம் வென்று இருப்பது தன்னம்பிக்கை தானே !

 

இந்திய ராணுவ வீரர் நீரஜ்சோப்ரா ,சுவீடனில் பயிற்ச்சி எடுத்துகொண்டவர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *