December 7, 2021

கலைஞரை கடந்து போகும் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் .

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில்சிறப்பாக  நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கொரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாக, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார் .
இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டஅமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.டெல்லியிலும்  அஞ்சலி செலுத்தினர்
கருணாநிதி நினைவுநாளில் நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகம் எங்கும் திமுக தலைவர்கள் தொண்டர்கள் நினைவு அஞ்சலி செலுத்திவருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *