December 7, 2021

மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை

     மாமன்னன் இராசேந்திரச்சோழன் புகழ் வாழ்க

 

இன்று (5/8/2021) மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை.
இவ்விழாவை இராசேந்திரச்சோழன் அரியணை ஏறிய ஆயிரமாண்டான 2014 – முதல் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழுமமும் இவ்வூர் மக்களும் இருநாள் விழாவாக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
கொரானா பெருந்தொற்று இடர்பாட்டால் இவ்வாண்டு இவ்விழா தவிர்க்கப்பட்டு இராசேந்திரச்சோழன் திருவுருப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தல் கங்கைகொண்டசோழீசுவரருக்கு நன்னீராட்டல் உணவளித்தல் என சுருக்கப் பட்டுள்ளது.
அலைகடல் நடுவேப் பலகலம் செலுத்திக் கங்கையும் கடாரமும் ஈழமும் கொண்டு சிங்காதனத்திலிருந்து தென்கிழக்கு ஆசியாவை ஆதிக்கம் செய்த செம்பியர்க்கோன் இராசேந்திரச்சோழனை நினைவு கூறும் ஆடித்திருவாதிரை நாளைக் கொண்டாடுவோம்.
இரா.கோமகன்.
கங்கைகொண்டசோழபுரம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *