December 7, 2021

சடசடவென சரிந்த மலை ; அறியாமல் பயணித்த டெம்போபயணிகள் !

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் ஆப்பத்தை அறியாமல் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

மலையின் உச்சியில் ஏற்ப்பட்ட நிலசரிவு மலையின் அடிவாரத்தில் இருந்தவர்களுக்கு பெரும் தூசி கிளம்புவது போல தெரிந்தது ஆனால் தூசிகளை முந்திக்கொண்டு பெரும் பாறைகளும் கற்களும் பெரும் சத்தத்துடன் உருண்டு வருவதை பார்த்தனர்.

உடனே அலற துவங்கினர் சத்தம் எழுப்பி பலரை ஓட செய்தனர் . இருப்பினும் சுற்றுலா பயணிகளுடன் வந்த டெம்போ ஓன்று ஆபத்தை அறியாமல் வந்து கொண்டு இருந்தது பாறைகள் சட சடவென தரைதலத்தை தாக்குவது கண்டு மக்கள் பாதுகாப்பாக ஓடினர் .

அதில் ஒரு பாறை டெம்போ மீது விழுந்து அதில் பயணித்த 9 பயணிகளை உடனே பலிகொண்டது 3 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது . கிழே விழுந்த பாறைகள் பலத்த சேதங்களை ஏற்ப்படுத்தியது ஒரு பாறை குதித்து பாலம் மீது விழுந்து பாலத்தையே தகர்த்தது அதிர்சியை ஏற்ப்படுத்தியது இணையத்தில் இந்த காட்சிகள் பரவி நிலைமையை தெரிவித்தன .

மீட்பு வீரர்கள் விரைவு

சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *