December 7, 2021

உள்ளாட்சித் தேர்தல் எப்போது..? : அமைச்சர் விளக்கம்..!

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியக்கருப்பன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழக மாநில வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 1,892 பயனாளிகளுக்கு 9 கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் தலைமையில், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: “எதிர்க்கட்சியும் பாராட்டும் அளவிற்கு திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது. உதாரணமாக, கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்றை தீவிர நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில், விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *